உளுந்தூர்பேட்டை பியூலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாபெரும் உணவு திருவிழா பாரம்பரிய உணவுகளுடன் மாணவர்கள் பங்கேற்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் பியூலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாபெரும் உணவு திருவிழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக களமருதூர் அருணா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், மற்றும் பார்க்கவன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர், இவர்களை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு வகைகள்,சிறுதானிய உணவு வகைகள், தற்போதைய நடைமுறையில் உள்ள உணவுகள் உட்பட 500 க்கும் மேற்பட்ட உணவுகள் தயாரித்து காட்சிபடுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் அதனை உண்டு மகிழ்ந்தனர்.
No comments