Breaking News

பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்.

 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கல்கூடப்பட்டி மண்டு கொட்டாய் கிராமத்தை  சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இவரது மகள் ஐஸ்வர்யா (வயது. 20) இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது. 21) இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ.விசுவல் கம்யூனிகேசன் 4 ம் ஆண்டு படித்து வருகிறார். ஐஸ்வர்யா, ஸ்ரீகாந்த இருவரும் சிறு வயதில் இருந்தே நட்பாக பழகி வந்தனர். நட்பு காதலாக மாறியது, ஆனால் இவர்களது காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு 11 மணிக்கு அனைவரும் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்று கோவையில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.


இதுகுறித்து பெற்றோரை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் பெண்ணின் பெற்றோர் இத்திருமணத்தை ஏற்று கொள்ளாததால், ஐஸ்வர்யாவின் விருப்படி காதலனுடன் அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி காதலனுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில்  தஞ்சமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Copying is disabled on this page!