கல்வி காவலர் பட்டம் பெற்ற சீர்காழி இ.மார்கோனி.
சீர்காழியை சேர்ந்தவர் இ.மார்கோனி. இவர் தமிழ்சங்க தலைவராகவும், தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட குருஞானசம்பந்தர் மிஷன் எழில் மலர் மெட்ரிக் பள்ளி செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தின் போது ராஜகோபுரம் திருப்பணி மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கோயில் முழுதும் மலர்கள் தூசுதல்,நாகேஸ்வர முடையார் கோயில் கோபுர திருப்பணி, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் ராஜ கோபுர திருப்பணி பதினெண் புராணேஸ்வரர் கோயில் சிவன் சன்னதி மற்றும் மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொண்டுள்ளார்.
மேலும் சீர்காழி சுற்ற வட்டார பகுதியில் பல்வேறு திருக்கோயில் திருப்பணிகளுக்கான நன்கொடையை வழங்கியுள்ளார். ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ ஸ்வாமி கோயில் திருப்பணியிலும் நன்கொடை வழங்கியுள்ளார். தருமபுரம் ஆதீனம் கும்பாபிஷேகத்திற்காக குரு லிங்க சங்கமம் பாதயாத்திரையாக சீர்காழி வரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார். இவரது ஆன்மீகப் பணி மற்றும் கல்விப் பணியை பாராட்டும் விதமாக தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், மார்கோனிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சாதரா அணிவித்து கல்வி காவலர் என்னும் பட்டத்தினை வழங்கி விழா மேடையில் கௌரவித்தார்.
No comments