சுரண்டை அருகே லோட் ஆட்டோ கவிழ்ந்த விபத்து சிகிச்சை பெறுவோருக்கு எம்பி ராணி ஸ்ரீகுமார் நிதி உதவி.
தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்டோவில் வயல் வேலைக்கு சென்றபோது சுரண்டை அருகே நேற்று காலை விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் அதே வாகனத்தில் பயணம் செய்து இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண்கள் 14 பேர் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்கள்.
தொடர்ந்து இன்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் பெண்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண தொகையாக ரூபாய் 70ஆயிரமும், அவர்களுக்கு பழங்களும் வழங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு முறையான சிகிச்சை அ உறுதிபடுத்திக் கொண்டார்கள்.
No comments