இளையான்குடியில், அண்ணாமலை உருவ பொம்மையை செருப்பால் அடித்து, எரிக்க முயன்ற அதிமுகவினர். போலீசார் தடுத்து நிறுத்தம்.
கடந்த சில நாட்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, அதிமுக நகர செயலாளர் நாகூர் மீரான், ஒன்றிய செயலாளர் கோபி தலைமையில், அதிமுகவினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, எரிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இளையான்குடி காவல் நிலைய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறித்து சென்றனர். இதனால் இளையான்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments