ஊத்தங்கரை அருகே அங்கன்வாடி மையம்: புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் கோரிக்கை
ஊத்தங்கரை ஒன்றியம் புதூர் புங்கனை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தரும்படி கோரி பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சூறாவளி காரணமாக அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை தகர்ந்தது. அதன் பிறகு, குழந்தைகளின் நலன் கருதி அருகிலுள்ள கோவில் வளாகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கோவில் திருவிழா காரணமாக மீண்டும் பழைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழுதடைந்த கட்டிடத்தில் குழந்தைகளை அமர வைக்க முடியாததால் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய கட்டிடம் கட்டப்படும் வரை குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மாட்டோம் எனவும், மழை காலத்தில் உணவு பொருட்கள் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய கட்டிடம் கட்டும் பணியை துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments