Breaking News

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு - வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் !!!!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது.


தமிழ்நாடு கல்சுரல் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகு துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொதுச் செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.


இந்த போட்டியில்  மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனத்தில் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.


நிகழ்ச்சியில்  தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவ சக்திவேல் முருகன், மற்றும் கோமதி, கோபி, முருகன், மற்றும்  மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், திரளானோர்  கலந்து கொண்டனர்

No comments

Copying is disabled on this page!