ஜோலார்பேட்டை அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் - அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மனைவி சுமதி இவர் பெரிய மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஏழுமலைக்கும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த இளங்கோவன், தெய்வ சுந்தரம், ரமேஷ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த இருப்பு கம்பியால் ஊராட்சி மன்ற தலைவர் சுமதியை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த படுகாயம் அடைந்த சுமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments