Breaking News

பெண் சாவில் மர்மம் உள்ளதாக கூறி சீர்காழி அரசு மருத்துவமனை வாசலில் உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகர எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (வயது 42) இவர் கேரளாவில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (வயது 31) ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்பொழுது பிரகன்யா (வயது 10) மதுஸ்ரீ (வயது 6),  சமிருத்தா (வயது 3) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்ததா கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டில் மர்மமான முறையில் சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகன்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


அங்கு சுகன்யாவின் உறவினர்கள் சுகன்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் சுகன்யாவின் கணவர் பிரபு என்பவரை கைது செய்த பின்னர் தான் சுகன்யாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 


இதனால் நேற்று உடல் கூறு ஆய்வு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments

Copying is disabled on this page!