காரைக்கால் திடீர் வாகன சோதனை ஆவணங்களின்றி ஓட்டப்பட்ட மூன்று ஆட்டோக்கள் பறிமுதல்.
காரைக்கால் திடீர் வாகன சோதனை ஆவணங்களின்றி ஓட்டப்பட்ட மூன்று ஆட்டோக்கள் பறிமுதல். போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை.
காரைக்கால் மாவட்டத்தில் ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படுவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் எழுந்த புகாரின் பேரில் மண்டல போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. வாகன சோதனையில் ஆட்டோ மட்டுமின்றி அனத்து ரக வாகனங்களும் சோதனை செய்யப்பட்டது.
இச்சோதனையில் வேக கட்டுப்பாட்டு கருவி, மாசு கட்டுப்பாடு சான்றிதழ், அதிக ஒலி எழுப்பும் ஹாறன் மேலும் அதி வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி மற்றும் உரிய ஆவணங்கள் உள்ளனவா என பரிசோதனை செய்தனர்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட மூன்று ஆட்டோக்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அபராத தொகையை கட்டுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன ஓட்டுநர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் எனவும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சோதனையில் ஆவணங்களில் உள்ளது போன்று இஞ்ஜின் நம்பர் மற்றும் நேசஸ் நம்பர் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
No comments