Breaking News

புதுச்சேரியில் ஒரு சில நாட்களில் வெள்ளை அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.


அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மணவெளி தொகுதி பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகளுடன் திட்ட ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.


கூட்டத்தில் சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி பேசுகையில்;
மகளிர் சுய உதவிக் குழுவினர் பால் உற்பத்தியை பெருக்க, 100 மாடுகள் வரை வளர்ப்பதற்கு அரசு ரூ.1 கோடி வரை மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி முன்னேற்ற வேண்டும். மகளிர் தொழில் துவங்க அனைத்து உதவிகளையும் அரசு செய்வதற்கு தயாராக உள்ளது. ஒரு சில நாட்களில் வெள்ளை அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றார்.


இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி, அலுவலக ஊழியர்கள், சுய உதவி குழுக்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!