தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள். 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்.
இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஆவணித்திருவிழா தொடங்கி உள்ளதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து விட்டு காலை 5 மணி முதலே காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையில் வந்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் கடற்கரை பகுதி, நாழிக்கிணறு, பேருந்து நிலையம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வள்ளிகுகை போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
No comments