Breaking News

ஊத்தங்கரை பகுதிகளில் செடிகளில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு, விவசாயிகள் வேதனை.


ஊத்தங்கரை அருகே பப்பாளி செடிகளுக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் நோய் தாக்குதலால் மற்ற விவசாய பயிர்களும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடக்கானுர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் பப்பாளி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள பப்பாளி செடிகளுக்கு வாடல் நோய், இலை சுருட்டல் நோய், வைரஸ் நோய் உள்ளிட்டவற்றின் தாக்குதலால் விளைச்சல் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.


நோய் தாக்குதல் காரணமாக மரத்தில் இலைகள் சுருண்டும் மஞ்சள் நிறத்திலும் உள்ளது, மேலும் காய்கள் சிறுத்து மரத்திலே அழுகி விடுவதால் அறுவடை செய்ய முடியாமல் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து இந்த பூச்சி தாக்குதல் மற்றும் வைரஸ் நோய்  காரணமாக அருகில் பயிரிடப்பட்டுள்ள மாற்று பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு போதிய மருந்துகளும் பூச்சி மற்றும் வைரஸ் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துரைத்து அருகில் உள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!