மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் வாகனத்தை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் வழங்கினார்.
புதுச்சேரி அரசு சமூகநலத்துறை மூலம் திருபுவனை தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மோட்டார் வாகனத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,40,000/- மதிப்பீட்டில் சமூக நலத் துறை மூலம் மோட்டார் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மோட்டார் வாகனத்தை வழங்கினார். இதில் சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் அன்பழகன், சுருதி, உட்பட சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments