Breaking News

தரங்கம்பாடி தாலுக்காவில் நடைபெற்ற உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள அனைத்து கிராம வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் இன்று முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சமூக பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் கீதா அறிவுறுத்தலின்படி, தரங்கம்பாடி சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் பாபு மேற்பார்வையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற்றது. இதில் பெரம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில், உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. 


இதில் கொத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், கிளியனூர் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், ஈச்சங்குடி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், எரவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் நாகஜோதீஸ்வரன், நல்லாடை கிராம நிர்வாக அலுவலர் வெங்கட் நிவாஸ், திருவிளையாட்டம் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், நரசிங்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் முருகன், கொடை விளாகம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், சேத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராம ஜெயம், முத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார், மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் பங்கேற்றனர். 


முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். இதில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இறப்பு ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்காண உதவித்தொகை அனைத்துக்கும் மனுக்கள் பெறப்பட்டது.

No comments

Copying is disabled on this page!