திருப்பத்தூரில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பத்தூரில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அரசு ஊழியர் அய்க்கிய பேரவையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கவிஞர் செ.ராஜி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சிவராமன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 5 அம்ச கோரிக்கைகளை இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 16(4)(A)வை பயன்படுத்தி பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தர்பகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஆனஸ்ட்ராஜ், மாவட்ட நிதி செயலாளர் ஆசிரியர் குமார்,மாவட்ட துணைத்தலைவர்கள் கந்தன், ச.முத்துகுமரன், அரசு ஊழியர்களின் ஐக்கிய பேரவையின் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தங்கபாண்டியன் அம்பேத்கர் பெரியார் மார்ஸ் படிப்பு வட்டம் மாவட்ட செயலாளர் குரிசில்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments