Breaking News

திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டிட பணிகளை விரைந்து முடிக்க துணை நிலை ஆளுநர் உத்தரவு.


திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டிட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  பொதுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு 38 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் அப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்துள்ளதால் பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் உத்தரவின் பேரில் திருநள்ளாறு தொகுதி தலைவர் ஆறுமுகம் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளித்தார்.


இதனை அடுத்து புதிய பள்ளி கட்டிடத்தை பார்வையிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பள்ளி கட்டுமான பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி கட்டிடத்தின் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் முருகதாஸ், தொகுதி செயலாளர் ஜெய்சிம்மன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!