ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் வட்ட அளவிலான தடகளப் போட்டி துவக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜோலார்பேட்டை வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் துவக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா தலைமையாசிரியர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு கொடியேற்றி துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், மற்றும் கோப்பைகள், வழங்கி சிறப்பித்தனர்கள்.
உடன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் லட்சுமி பிரியா இறுதியில் நன்றியுரை வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்கள், மாணவிகள், பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments