Breaking News

ஷேர் ஆட்டோவில் சென்ற மாணவன் கீழே விழுந்து மாணவன் உயிரிழப்பு.


ஷேர் ஆட்டோவில் சென்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தவறி கீழே விழுந்தபோது ஆட்டோவின் சக்கரம் ஏறி பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியம் சின்னநாகப்பூண்டி கிராமத்தை  சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் கவியரசு(11). இவன் ஆர்.கே. பேட்டை அடுத்த எரும்பி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். 


இந்நிலையில் வழக்கம் போல் இன்று ஷேர் ஆட்டோவில் எரும்பி கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தான். அப்போது சிறிது தூரம் சென்ற நிலையில் ஆட்டோ ஓட்டுனர் அருகே இடது பக்கம் அமர்ந்திருந்த மாணவர் கவியரசு தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சக்கரம் ஏறியதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 


உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் முனிராஜ் (45) சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று முதல் உதவி அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் கவியரசு உயிரிழந்தான். 


இது குறித்து மாணவன் கவியரசுவின் தந்தை சரவணன் ஆர்.கே. பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பயிற்சி இன்ஸ்பெக்டர் ஆகாஷ் குமார் வழக்கு பதிவு செய்து டிரைவர் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Copying is disabled on this page!