புதுச்சேரியில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்கு வயது தளர்வு நீட்டிக்க வலியுறுத்தி பட்டதாரி இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் சார்பில் இன்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சுதேசி மில் அருகில் இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு சங்கத்தின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்தது. ஆம்பூர் சாலை அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். கொரோனா காலத்தை கணக்கிட்டு பல மத்திய பணிகளுக்கு மூன்று ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் புதுச்சேரி அரசும் உதவியாளர்கள் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிட தேர்வில் மூன்று ஆண்டுகள் தளர்வு அளிக்க வேண்டும் என்றும் அரசிதழில் பதிவு பெறாத பி, சி பணியிடங்களுக்கு வயது தளர்வை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி அமைதி பேரணி நடந்தது.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments