புதுவையில் இந்தியா கூட்டணி மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடிப்படை உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழகத்தின் மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணி மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக மாணவரணி அமைப்பாளர் எஸ்பி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உதயராஜ் ,அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் முருகன், இந்திய மாணவர் சங்கம் பிரகாஷ் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கௌசிகன், முற்போக்கு மாணவர் கழகம் சிவச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்கள்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்தும், அடிப்படை உரிமைலுக்காக போராடிய பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாளிகைகள் தாக்கப்பட்டதை கண்டித்தும், பல்கலைக்கழகத்தில் 25% இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்தும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் .
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments