வாணியம்படியில் இரும்பு திருடியவர்களை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
வாணியம்பாடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் இரும்பு பொருட்களை திருடி செல்ல முயன்ற நபர்பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள எம்ஆர் ஷெட் என்ற இடத்தில் பாலசுப்ரணியன் என்பவர் புதிய வணிக வளாக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார்.இந்த நிலையில் இன்று இரவு மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் அந்த கட்டிடத்தில் நுழைந்து கட்டிடத்தில் உள்ள 3 இரும்பு ஜாக்கிகளை கழற்றி எடுத்து செல்ல முயன்றுள்ளார்.அப்போது அங்கு கட்டிட உரிமையாளர் வந்துள்ளார்.அவரை பார்த்து தப்பி ஓட முயன்ற அந்த இளைஞரை கட்டிட உரிமையாளர் பிடித்துள்ளார்.
அப்போது அங்கு பொதுமக்கள் ஒன்று கூடி அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலிசார் அந்த இளைஞரை மீட்டு விசாரணை செய்த போது அவர் கிரி சமுத்திரம் பகுதியை சேர்ந்த பாண்டியன்(27) என்பதும் அவர் மது போதையில் திருட முயன்றதும் தெரியவந்தது.
அதன் பின்னர் பொது மக்களிடமிருந்து அந்த இளைஞரை மீட்ட போலிசார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.திருட முயன்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர்
பு.லோகேஷ்.
No comments