தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி மாணவ. மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக தூத்துக்குடி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலின் படி தபால் தலை சேகரிப்பு கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில், அஞ்சல்துறை வணிக நிர்வாக அலுவலர் பொன்ராம்குமார் வரவேற்று பேசினார். தூத்துக்குடி உதவி கோட்ட கண்காணிப்பாளர் ஹேமாவதி தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி அஞ்சல் உபகோட்ட ஆய்வாளர் மீகாநாயகம், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தினி ஹௌசல் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். தபால் தலை சேகரிப்பு பற்றிய சிறப்பு கருத்தரங்கில் ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். மேலும், மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பு பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இறுதியாக அஞ்சல் துறை ஊழியர் பிரியாதேவி நன்றி கூறினார்.
No comments