தூத்துக்குடியில் இந்தியன் வங்கிக்குள் நுழைந்த 5அடி நீள கொம்பேரி மூக்கன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள தலைமை இந்தியன் வங்கியில் திடீரென 5 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வங்கி ஊழியர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் 5 தீயணைப்பு வீரர்கள் இந்தியன் வங்கியில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டிய கொம்பேரி மூக்கன் பாம்பினை இலாபகமாக பிடித்தனர்.
பின்னர் அதனை பாதுகாப்பாக எடுத்துச்சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வங்கியில் பாம்பு நுழைந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments