Breaking News

தெக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மறுகட்டமைப்பு பள்ளி மேலாண்மை குழு தேர்வு.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் தெக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.



முன்னாள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவசங்கரி முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பள்ளி தலைமை ஆசிரியர் க.தமிழ்வடிவு பள்ளி மாணவ மாணவிகளின் தரமான கல்வியை உறுதி செய்திடுவோம் பள்ளி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் தற்போது புதிய பள்ளி மேலாண்மை குழு தலைவர் பானுப்பிரியா துணைத் தலைவர் ரம்யா  உள்பட 24 உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.


உடன் பள்ளி மேலாண்மை குழு மேற்பார்வையாளர் பானுமதி ஒன்றிய குழு உறுப்பினர் சத்தி ரஜா செந்தில்குமார்  சமூக ஆர்வலர் பாபு  மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி மாணவர்களின் 70க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Copying is disabled on this page!