திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் இலங்கை ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டு வழங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் நேற்றைய தினம் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காலை முதல் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை கிழக்கு மாகான கெளருவ ஆளுனர் செந்தில் தொண்டைமான் சுவாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் கோவில்க்கு வருகை தந்தார்.
அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர். அதன்பின் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
No comments