அரசின் திட்டங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முறையாக பயன்படுத்தி பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என சபாநாயகர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்
அரசின் திட்டங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முறையாக பயன்படுத்தி பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என சபாநாயகர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை - அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் நல்லவாடு பூரணாங்குப்பம் ஆண்டியார்பாளையம் ஆகிய பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகளுடன் திட்ட ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் தவளக்குப்பம் பகுதியில் உள்ள கே.வி.பி ஹாலில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மகளிர் மேம்பாட்டிற்காக புதுச்சேரி அரசு செய்து வரும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மேலும், அரசின் திட்டங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முறையாக பயன்படுத்தி பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் சுய உதவி குழுக்களை சேர்ந்த 250ற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments