திருக்கடையூரில் விதை சேமிப்பு சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சுமார் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நடைபெற்றது இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர் செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை இணை இயக்குனர் வெற்றிவேலன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால சரஸ்வதி செம்பனார்கோவில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் திமுக ஒன்றிய செயலாளர்கள் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் அமுர்த விஜயகுமார் வடக்கு ஒன்றியம் அப்துல் மாலிக் தெற்கு ஒன்றியம் அன்பழகன் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் வருவாய்த் துறையினர் வேளாண்மை துறையினர் பங்கேற்றனர்.
No comments