கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதினோராம் வகுப்பு அறிவியல் பிரிவில் படிக்கும் மூன்று மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் உடனடியாக சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் காளியப்பன் இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை மருத்துவமனை அழைத்து சென்றார், இந்த கட்டிடம் 2021-22 ஆம் ஆண்டில், எம்பி டாக்டர் செல்வகுமார் அவர்கள் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்டதாகவும், இந்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வந்ததாகவும் தகவல். இவ்வளவு சமீபத்தில் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆணையாளர் பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் சரவணன், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு முருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து, பள்ளிகளின் கட்டமைப்பு பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments