புதுச்சேரி கல்வித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்நிலையில் இப்பள்ளி பழுதடைந்து இருப்பதால் இப்பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட புதுச்சேரி கல்வித்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு ரூபாய் 10.5 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில் பழைய பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவர்களை புதிய பள்ளி கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து வந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் இன்று புதிய மற்றும் பழைய கட்டிடங்களை நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை துணை இயக்குனர் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் கமலக்கண்ணன் திருநல்லாரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும் மழைக்காலங்களில் தண்ணீர் கசிவதால் மின்சார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் நலன் கருதி உடனடியாக புதிய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி கல்வித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார் இதனால் புதுச்சேரியில் கல்வி தரம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments