Breaking News

புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு வழங்கல்.


கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் வேளாங்கண்ணிக்கு புனித பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் கதிரவன் தலைமை தாங்கி உணவு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். 


செயலாளர் ராமலிங்கம்  பொருளாளர் சரவணன் ரோட்டேரியன் விஜய்பிரபு செல்வகுமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் பாதயாத்திரை செல்லும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.


மேலும் இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஹபீப் ரகுமான் சேஷாத்ரி சுதர்சன் சரவணபவன் உள்ளிட்ட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!