பிரபல ரவுடியை விசாரணைக்கு அழைத்துவந்த போலீஸ், பாதுகாப்பு கருதி போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு.
ரவுடி மர்டர் மணிகண்டனை காவலில் விசாரிக்க அழைத்து வந்ததால், ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உழவர்கரையைச் சேர்ந்தவர் விமல். கொலை செய்யப்பட்ட ரவுடி தெஸ்தான் உறவினர். கடந்த மாதம் 18 ம் தேதி விமல் வீட்டின் முன்பு சந்தேகத்திடமாக நின்றிருந்த 6 பேர் போலீசார் வருவதை பார்த்து தப்பியோடினர். விசாரணையில், சிறையில் உள்ள மர்டர் மணிகண்டன் உத்தரவுபடி, அவரது உறவினரான நோணாங்குப்பம், பள்ளிகூட வீதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 33; பூமியான்பேட்டை பவாணர் நகர், பிரகாஷ்குமார், 28; வாணரப்பேட்டை, பிரான்சுவா தோப்பு, ரவுடி ஜெரால்டு, 44; மற்றும் சார்ப் விக்கி, மோகன்ராஜ், பைரவா பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இதில், ரஞ்சித்குமார், பிரகாஷ்குமார், ஜெரால்டு ஆகிய மூவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிறையில் உள்ள மர்டர் மணிகண்டணிடம் விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கைதி மணிகண்டனை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மர்டர் மணிகண்டனை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி யாரேனும் நுழைந்து விட கூடாது என்பதிற்காக போலீஸ் நிலைய முகப்பு கேட் பூட்டப்பட்டது. போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் சாதாரண உடையில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments