காரைக்காலில் திடீர் கனமழை மக்கள் மகிழ்ச்சி.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது காரைக்கால், நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி, திருப்பட்டினம், கோட்டுச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. விட்டு விட்டு பெய்த கனமழையால் பணி முடித்து வீடு திரும்புவோர் சிரமத்திற்கு உள்ளானார்கள். இருந்தபோதிலும் கடந்த ஒரு மாதகாலமாக வெயில் வாட்டி வையத்து நிலையில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments