வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளதை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் இரா. க. கவிதா ஆய்வு.
வேலூர் மாவட்டம் வேலூரில் 28.8.2024 இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளதை தொடர்ந்து ஊர்வலம் நடைபெறும் உள்ள முக்கியமான சாலைகளான வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து சைதாப்பேட்டை, பஜார் மண்டி வீதி கோட்டையை சுற்றி, மாங்காய் மண்டி வழியாக சென்று வர வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.க. கவிதா தலைமையில் ஆய்வுகள் மேற்கொண்டு வட்டாட்சியர் முரளிதரன் வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் விஜயா மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலர் வெங்கடேசன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஆறுமுகம் துணை வட்டாட்சியர் செந்தாமரை ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments