புதுச்சேரி பழங்குடியினர் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்.
புதுச்சேரி பழங்குடியினர் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் காட்டுநாயக்கன் பழங்குடி மக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி பழங்குடியினர் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் முத்திரப்பாளையம் மதுரை வீரன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதன்மைச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காட்டுநாயக்கன் சமூக மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments