புதுவை அரசு சார்பில் கவிஞர் புதுவை சிவம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
கவிஞர் புதுவை சிவம் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனையொட்டி, காமராஜ் சாலை-சித்தன்குடி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவை தலைவர் செல்வம்,பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கவிஞர் புதுவை சிவத்தின் குடும்பத்தினர், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் உட்பட பலர் புதுவை சிவம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி.
No comments