இருசக்கர வாகன திருடனை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்.
வாணியம்பாடி அருகே, மாட்டுச் சந்தையில் சிக்கிய இருசக்கர வாகன திருடனை பொதுமக்கள் சாரமாறியாக அடித்து பிடித்தனர். சமுக வலைதளங்களில், திருடனை அடித்து பிடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வராத நிலையில், அந்த இடத்தில் வார மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது, இந்தச் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் மாடுகளை விற்பனைக்கு இங்கு கொண்டு வருவது வழக்கம், இந்த சந்தையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்வது வழக்கம் இதனைப் பயன்படுத்தி இருசக்கர வாகனம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நெக்குந்தி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் சந்தையில் வியாபாரி ஒருவரின் இருசக்கர வாகனத்தை திருடும் முயன்ற போது பொதுமக்களை பிடித்து சாரா மாறியாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் துறையினர், திருடனை பொதுமக்கள் இடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடனை பொதுமக்கள் பிடித்து, சாரமாறியாக அடித்த வீடியோ காட்சி வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
திருடனை பொதுமக்கள் பிடித்து, சாரமாறியாக அடித்த வீடியோ காட்சி வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
No comments