தூத்துக்குடி காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்.
காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி வடபாகம், மத்தியாகம், தென்பாகம், முத்தையாபுரம், தெர்மல்நகர், தாளமுத்துநகர் மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். முகாமிற்கு நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா தலைமை தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், அனைத்து மனுதாரர்களின் புகார்கள் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மூலமாக விசாரணை செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments