புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கண்டித்து அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுகவினர் உப்பளம் மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதிமுகவினரின் போராட்டத்தின் காரணமாக மின் துறை தலைமை அலுவலகத்தின் நுழைவாயில் உள் பக்கமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டது. இதன் அடுத்து நுழைவாயிலின் மீது ஏறி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பியதால் மின்துறை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறும்போது:- புதுச்சேரியில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டணத்தை நூறு யூனிட் வரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் உடனடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் மாநிலத் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments