மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டாக பந்த் போராட்ட அறிவிப்பு.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலர் தேவப்பொழிலன், சிபிஐஎம்எல் மாநில கமிட்டி உறுப்பினர் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் மின்துறை கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டண உயர்வுக்காக நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எந்த விவரமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார்.
மேலும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு மின் கட்டண ரசீதும் ஒரு காரணம். ஏனெனில் பயன்படுத்திய மின் யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல் கூடுதலாக பலவித கட்டணங்களை மக்களுக்குத் தெரியாமல் வசூல் செய்வது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.
தேர்தலில் மக்கள் தந்த பாடத்தை ஏற்காமல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், மின் துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்துவதாக அறிவிக்க கூறியும், மின் கட்டண ரசீதில் பயன்படுத்திய மின் யூனிட்டுக்கு மட்டுமே பணம் வசூலிக்க வேண்டும் என கூறி வரும் இரண்டாம் தேதி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினர். மேலும் அதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு பிறகு பந்த் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments