Breaking News

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210மெ.வா மின் உற்பத்தி தொடக்கம்.


திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 


1வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 210மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!