திருப்பத்தூர் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. காவல்துறையில் பொதுமக்கள் அளித்து புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான விசாரணைகளில் திருப்தி பெறாத 9 புகார் மனுதர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் பொதுமக்களிடமிருந்து 50 புதிய புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். உடன் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
No comments