Breaking News

எதிர் திசையில் பஸ்சை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்த காவலர்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் புறவழிச் சாலையில் இருந்து நகரத்திற்கு வரும் வழியில் உள்ள குறுக்கு சாலை பகுதியில் அடிக்கடி ஏற்பட்ட விபத்தை குறைக்கவும் ஒரு வழி பாதையாக திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இதற்கிடையே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து நகருக்குள் வரும் லாரிகள் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் விருத்தாசலம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒரு வழி பாதையில் எதிர் திசையில் வாகனங்களை இயக்கி நகருக்குள் வருகின்றன. 


இது குறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் நேற்று புறவழிச்சாலை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது சுங்கச்சாவடியில் இருந்து எதிர் திசையில் வந்த அரசு பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக வாகனத்தை இயக்கி வந்த பஸ் ஓட்டுனருக்கு 1500 அபராதம் விதித்தார். 


அரசு பஸ் ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படுவதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் நகருக்குள் வாகனத்தை எதிர் திசையில் இயக்காமல் வழக்கமாக செல்லக்கூடிய பாதையில் ஓட்டிச் சென்றனர்.

No comments

Copying is disabled on this page!