உளுந்தூர்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடத்துவது குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது.
மேலும் விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாளான ஒன்பதாம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டு விநாயகர் சிலைகள் நீர்நிலைகள் கரைக்கப்பட உள்ளது இந்த நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்துவது குறித்து அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் விநாயகர் சிலை அமைப்பு குழுவினர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது.
அப்பொழுது விநாயகர் சிலை வழிபாடு செய்யும்போது மத ரீதியான பிரச்சினை ஏற்படாத வகையில் அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்த வேண்டும் எனவும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் பொழுது வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் இடங்களில் மேளம் அடிப்பது வண்ணப் பணிகள் தூவுவது ஆரவாரம் செய்வதை தவிர்த்து அமைதியான முறையில் ஊர்வலத்தை நடத்தி ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என போலீசார் அறிவித்தனர்.
காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை எடைக்கல் எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments