வாணியம்பாடி கேட்டரிங் மாணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாயாசம் திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் செயல்பட்டு வரும் கேம்பிரிட்ஜ் கேட்டரிங் இன்ஸ்டிடியூஷன் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் பாயாசம் திருவிழா கேம்பிரிட்ஜ் இன்ஸ்டிடியூஷன் நிறுவன தலைவர் செப். பரூக் பானுவேல் சேவியர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ சரவணா இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவர் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் கேட்டரிங் மாணவ மாணவிகள் 20க்கும் மேற்பட்ட பாயாசம் பழங்கள் பாயாசம், இளநீர் பாயாசம், வாழைப்பழம் பாயாசம், பேரிச்சம்பழம் பாயாசம், கல்கண்டு பாயாசம் , திணை வகைகள் பாயாசம் குதிரைவாலி பாயாசம் சிறுதானிய வகைகள் பாயாசம் மற்றும் பல வகையான பாயாசம் செய்து அசத்தினர்.
உடன் கேட்டரிங் இன்ஸ்டிட்யூட் தாளாளர் லதா மோகன், செப். துஷ்யந்தன் ஆசிரியர் சுகந்தி மற்றும் 20க்கு
மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments