Breaking News

கோவை சரவணம்பட்டி பிபிஜி செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா.


கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிபிஜி செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவம் சார் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரி சார்பாக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுமார் 730 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் பிபிஜி கல்வி குழுமங்கள் சார்பாக, பிபிஜி செவிலியர் கல்லூரி கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா இன்று நடை பெற்றது இதில் 405 இளங்கலை பட்டதாரிகளும், 75,முதுகலை பட்டதாரிகளும், பட்டங்களை பெற்றனர். 


மேலும், பிபிஜி மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரியில், மயக்க மருத்து தொழில் நுட்ப வல்லுநர், சுவாச சிகிச்சையாளர், மருத்துவ ஆய்வக வல்லூநர், சிறுநீரக துறை சார்ந்த வல்லுநர், இருதய தொழில்நுட்பவியல் ளர், இருதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த சிகிச்சையாளர், ஊட்டச்சத்து நிபுணர், கதீர் வீச்சுப் பட நுட்பர் மற்றும் கதிர் மருத்துவ நுட்பர் ஆகிய பிரிவுகளில் பட்டங்களை பெற்ற 250 மாணவ மாணவியர்களுக்கு அதற்கான பட்டங்கள் வழங்க பட்டது.இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நாராயணசுவாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பெருதை படுத்தினார். 


இந்த நிகழ்ச்சியில் பிபிஜி குழுமத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு, பிபிஜி கல்வி குழுமங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு, துணைத்தலைவர் அக்ஷய் தங்கவேல், பிபிஜி மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகளின் பாட இயக்குனர் டாக்டர் அஷ்வின், பிபிஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சித்ரா லிங்கராஜ், பிபிஜி செவிலியர் கல்லூரியின் துணைமுதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர். 


முன்னதாக நடைபெற்ற கல்வியாண்டில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பேராசிரியர் டாக்டர் நாராயணசுவாமி பதக்கங்களையும், சான்றிதல்களையும் வழங்கி பாராட்டினார். 


இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பட்டங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!