காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை புதுச்சேரி போக்குவரத்து துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் சேதமடைந்துள்ள போக்குவரத்து சிக்னல்களை அரசு சார்பில் 36 இடங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல்களாக மாற்றம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை புதுச்சேரி மாநில போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்பொழுது காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி, புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை தடுக்க சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments