பொதுமக்கள் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா பூம்புகார் எம் எல் ஏ பங்கேற்று துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று மின் பற்றாக்குறை போக்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது 63 கிலோ வாட் மின் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
இதில் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் உதவி மின் பொறியாளர் கார்த்திக் திமுக ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி பிரதிநிதிகள் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments