Breaking News

குமிலங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பால்குட திருவிழா.


குமிலங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பால்குட திருவிழா  500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடிகள்  எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா குமிலங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் வேண்டுவனவற்றை வேண்டிய மாத்திரத்தில் அருளும் அம்பிகைக்கு ஆடி மாதம் தொடங்கி 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஆண்டு திருவிழாகடந்தஆடி மாதம் 31ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 


10ம் நாளான இன்று காப்புக் கட்டிக் கொண்ட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோட்டையா கோவிலில் இருந்து  தீச்சட்டி, ஆதிசக்தி கரகம், பால் குடங்கள் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்தனர். வழிநெடுக்கிலும் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். 


பக்தர்கள்  தாங்கள் எடுத்து வந்த பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.  தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து ஆதி நாகாத்தம்மன் வேடம் தரித்த தேவேந்திர அடிகளார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

No comments

Copying is disabled on this page!