"பாரத ரத்னா" அன்னை தெரெசாவின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
பாரத ரத்னா அன்னை தெரெசாவின் பிறந்த நாளையொட்டி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
"பாரத ரத்னா" அன்னை தெரெசாவின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,சாய் J. சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கேஎஸ்பி ரமேஷ்,பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கிறிஸ்துவ அமைப்பகள் மற்றும் தன்னார்வலர்கள் அன்னை தெரேசா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments